ஆன்மிகம்
நம்பெருமாள் உபய நாச்சியார்கள், கிருஷ்ணன் உடன் கருட மண்டபத்தில் உறியடி உற்சவம் கண்டருளுளியபோது எடுத்த படம்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடி உற்சவம்

Published On 2020-09-12 06:27 GMT   |   Update On 2020-09-12 06:27 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கிருஷ்ணர் ஜெயந்தியை முன்னிட்டு நம்பெருமாள் ஸ்ரீபண்டாரம் ஆஸ்தான மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருளுளினார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாதந்தோறும் நடைபெறும் விழாக்களில் ஆவணி மாதம் நடைபெறும் கிருஷ்ணர் ஜெயந்தி புறப்பாடு மற்றும் உறியடி உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அதன்படி, நேற்று முன்தினம் காலை நம்பெருமாள் ஸ்ரீபண்டாரம் ஆஸ்தான மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருளுளினார். மாலையில் அலங்காரம் அமுது கண்டருளுளினார்.

உறியடி உற்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று காலை 7 மணிக்கு கிருஷ்ணன் புறப்பாடு நடைபெற்றது. எண்ணெய் விளையாட்டு கண்டருளி காலை 7.30 மணிக்கு கிருஷ்ணன் சன்னதிக்கு வந்து சேர்ந்தார். பின்னர் இரவு 7 மணிக்கு திருச்சிவிகையில் நம்பெருமாள், உபயநாச்சியார்கள் மற்றும் கிருஷ்ணன் உடன் புறப்பட்டு கருட மண்டபத்திற்கு இரவு 7.30 மணிக்கு வந்து சேர்ந்தார்.

இரவு 8.45 மணியளவில் கருட மண்டபத்தில் உறியடி உற்சவம் கண்டருளுளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். உறியடி உற்சவம் பக்தர்கள் அனுமதியின்றி கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
Tags:    

Similar News