செய்திகள்
திருப்பூரில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியாளர்கள்.

திருப்பூரில் மழையால் ஆடை விற்பனை பாதிப்பு - வியாபாரிகள் கவலை

Published On 2021-10-25 09:37 GMT   |   Update On 2021-10-25 09:37 GMT
தற்போது பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் தீபாவளி போனஸ் பட்டுவாடாவை துவக்கியுள்ளன.
திருப்பூர்:

திருப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ளூர் ஆடை வர்த்தக மையமான காதர்பேட்டை இயங்குகிறது. இப்பகுதியில் சில்லரை, மொத்த ஆடை வர்த்தகம் செய்யும் 700க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

திருப்பூரில் தயாரிக்கப்படும் பின்னலாடை ரகங்கள், பெங்களூரு போன்ற பிற பகுதிகளிலிருந்து ஆடைகளை தருவித்து, காதர்பேட்டை குறு, சிறு வர்த்தகர்கள் விற்பனை செய்கின்றனர்.

தற்போது பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் தீபாவளி போனஸ் பட்டுவாடாவை துவக்கியுள்ளன. இதையடுத்து பண்டிகைக்கு அணிந்து மகிழ்வதற்காக ஆடை ரகங்கள் வாங்க மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.  

ஞாயிற்றுக்கிழமையான நேற்று காதர்பேட்டை பகுதிக்கு ஆடை வாங்க காலை முதலே வாடிக்கையாளர் ஏராளமானோர் வரத்து வங்கினர். ஆண்கள், பெண்கள் ஏராளமானோர் ஆடை வாங்க வந்தனர்.

இதேபோல் புதுமார்க்கெட் வீதி, பெரிய கடை வீதி, குமரன் ரோடு பகுதி ஜவுளி கடைகள் வாடிக்கையாளர் கூட்டத்தில் மூழ்கின. இந்தநிலையில் மாலையில் திருப்பூர் நகர பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

கனமழை காரணமாக ஷாப்பிங் செய்ய வந்த மக்கள் கடைகளில் தஞ்சம் புகுந்தனர். காலை முதல் தொடர்ந்த பரபரப்பு மழைக்குப்பின் ஓய்ந்தது. மாலைநேர வியாபாரம் கடுமையாக  பாதிக்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் கவலையடைந்தனர். 
Tags:    

Similar News