ஆட்டோமொபைல்
மஹிந்திரா அல்டுராஸ் ஜி4

சோதனையில் சிக்கிய மஹிந்திராவின் பி.எஸ். 6 கார்

Published On 2019-09-17 10:47 GMT   |   Update On 2019-09-17 10:47 GMT
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய பி.எஸ். 6 ரக கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



இந்தியாவில் பி.எஸ். 6 புகை விதிகள் ஏப்ரல் 2020 முதல் அமலாக இருக்கிறது. மஹிந்திரா நிறுவனம் தனது வாகனங்களை புதிய புகை விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. 

புதிய விதிகள் அமலாகும் முன் மஹிந்திராவின் ஏழு பேர் பயணிக்கக்கூடிய ஃபிளாக்‌ஷிப் எஸ்.யு.வி. மாடலான அல்டுராஸ் ஜி4 சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 பி.எஸ். 6 மாடல் இந்தியாவில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சோதனையில் சிக்கிய பி.எஸ். அல்டுராஸ் ஜி4 மாடலின் பின்புறம் கார் வெளியிடும் புகையை கண்கானிக்கும் உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.



மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 மாடலில் பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 181 பி.ஹெச்.பி. பவர், 420 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. புதிய என்ஜினுடன் 7-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம்.

இந்தியாவில் அறிமுகமானதும் அல்டுராஸ் ஜி4 பி.எஸ். 6 மாடல் தற்போதைய மாடலை விட விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம். தற்சமயம் மஹிந்திராவின் ஃபிளாக்‌ஷிப் எஸ்.யு.வி. மாடல் விலை ரூ. 27.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மாடலின் விலை ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சம் வரை அதிகமாக நிர்ணயிக்கப்படலாம்.

புகைப்படம் நன்றி: ZigWheels
Tags:    

Similar News