செய்திகள்

2017-ம் ஆண்டின் சிறந்த ஹிந்தி வார்த்தை ஆதார்: ஆக்ஸ்போடு அகராதி கவுரவம்

Published On 2018-01-28 00:36 GMT   |   Update On 2018-01-28 00:36 GMT
கடந்த ஆண்டின் சிறந்த ஹிந்தி வார்த்தையாக ஆதார் என்ற வார்த்தையை ஆக்ஸ்போர்டு அகராதி தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. #AadhaarCard #HindiWord #OxfordDictionary
ஜெய்ப்பூர்:

கடந்த ஆண்டின் சிறந்த ஹிந்தி வார்த்தையாக ஆதார் என்ற வார்த்தையை ஆக்ஸ்போர்டு அகராதி தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் நலத்திட்ட பயன்களை பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியம் என பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதையடுத்து, வங்கி கணக்கு, பான் எண், ரேஷன் கார்டு உள்பட பல்வேறு அரசு நலத்திட்டங்களில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அரசும் வலியுறுத்தியது.

இதைத்தொடர்ந்து, இந்திய மக்கள் ஆதார் கார்டை பதிவு செய்வதுடன், அரசின் நலத்திட்ட பயன்களை பெறுவதற்கு இணைத்து வருகின்றனர். ஆதார் அடையாள அட்டை, நாடு முழுவதும், 120 கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் ஆதார் என்ற வார்த்தையை கேட்டிராத மக்களே இல்லை எனலாம். அந்தளவுக்கு மிகவும் பிரபலமாகி விட்டது.



இதற்கிடையே, ராஜஸ்தான் மாநிலம் தலைநகர் ஜெய்ப்பூரில் இலக்கிய திருவிழா நடந்துவருகிறது. அப்போது பத்திரிகையாளர் சவுரவ் திவிவேதி பேசுகையில், கடந்த ஆண்டின் சிறந்த ஹிந்தி வார்த்தையாக ஆதார் என்ற வார்த்தையை  ஆக்ஸ்போர்டு அகராதி தேர்வு செய்துள்ளது. நோட்பந்த், ஸ்வாச், விகாஸ், யோகா மற்றும் பாகுபலி உள்ளிட்ட வார்த்தைகல் இந்த பட்டியலில் இடம்பிடித்திருந்தன.

ஆனாலும், கடந்த ஆண்டில் மற்ற வார்த்தைகளை விட ஆதார் என்ற ஹிந்தி வார்த்தை நாடு முழுவதும் பரவலாக விவாதிக்கப்பட்ட வார்த்தையாக இருந்தது. எனவே, ஆதார் என்ற வார்த்தைக்கு 2017-ம் ஆண்டின் சிறந்த ஹிந்தி வார்த்தை என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.  #AadhaarCard #HindiWord #OxfordDictionary #tamilnews 
Tags:    

Similar News