ஆன்மிகம்
பழனி முருகன் கோவிலுக்கு ராட்சத கிரேன் மூலம் பறவைக்காவடி எடுத்து வந்த பக்தர்கள்.

பழனி முருகன் கோவிலுக்கு ராட்சத கிரேன் மூலம் பறவைக்காவடி எடுத்து வந்த பக்தர்கள்

Published On 2021-02-26 07:49 GMT   |   Update On 2021-02-26 07:49 GMT
பழனி முருகன் கோவிலுக்கு வால்பாறையை சேர்ந்த பக்தர்கள் ராட்சத கிரேன் மூலம் பறவை காவடி எடுத்து வந்தனர்.
பழனி முருகன் கோவிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இத்திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி நடைபெற்றது. இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பாதயாத்திரையாகவும் வந்தனர். இந்நிலையில் தைப்பூச திருவிழா முடிந்த பிறகும் ஏராளமான பக்தர்கள் அலகுகுத்தி பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

அதன்படி கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த பக்தர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்தனர். முன்னதாக அந்த குழுவை சேர்ந்த 9 பக்தர்கள் சண்முகநதியில் இருந்து பறவைக்காவடியில் பழனிக்கு வந்தனர். இதற்காக பெரிய கிரேன் மூலம் பறவைக்காவடி எடுத்து காரமடை, நால்ரோடு சந்திப்பு, புதுதாராபுரம் சாலை, குளத்துரோடு, திருஆவினன்குடி என பழனி நகரின் முக்கிய வீதிகள் வழியே பழனி முருகன் கோவிலை அடைந்தனர்.

மேலும் 10-க்கும் மேற்பட்டோர் 15 அடி நீள அலகு குத்தியும் வந்தனர். ராட்சத கிரேன் மூலம் பறவைக்காவடியில் வந்த பக்தர்களை பொதுமக்கள் தங்கள் செல்போனில் படம் எடுத்தனர்.

இதுகுறித்து அந்த குழுவை சேர்ந்தவர்கள் கூறுகையில், கடந்த 45 ஆண்டுகளாக எங்கள் பகுதியில் இருந்து பாதயாத்திரையாக வருகிறோம். தைப்பூச திருவிழா முடிந்த பிறகு வால்பாறையில் இருந்து பாதயாத்திரையாக பழனி சண்முகநதிக்கு வந்து, பின்னர் அங்கிருந்து பறவை காவடி எடுத்தும், அலகுகுத்தியும் பழனிக்கு வருவோம் என தெரிவித்தனர்.
Tags:    

Similar News