வழிபாடு
திற்பரப்பு மகாதேவர் கோவில் பங்குனி திருவிழா தொடங்கியது

திற்பரப்பு மகாதேவர் கோவில் பங்குனி திருவிழா தொடங்கியது

Published On 2022-03-31 07:57 GMT   |   Update On 2022-03-31 07:57 GMT
குமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு மகாதேவர் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களில் 3-வது சிவாலயம் திற்பரப்பு மகாதேவர் கோவில் ஆகும். இங்கு பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று மதியம் கொடியேற்றம் நடந்தது. கோவில் தந்திரி மாத்தூர் மடம் சங்கரநாராயணரு கொடியேற்றி வைத்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழா வருகிற 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. விழா நாட்களில் லட்ச தீபம் ஏற்றுதல், தீபாராதனை, பாகவத பாராயணம் போன்றவை நடைபெறும். 9 -ம் நாள் விழாவில் பள்ளி வேட்டையும், திருவிழாவின் நிறைவு நாளான 8-ந் தேதி ஆராட்டும் நடக்கிறது.
Tags:    

Similar News