செய்திகள்
கைது

காஷ்மீரில் பயங்கரவாத செயல்களுக்காக பணம் கொண்டு வந்த 3 பேர் கைது

Published On 2021-11-18 05:21 GMT   |   Update On 2021-11-18 05:21 GMT
கைது செய்யப்பட்ட மூன்று பேரும் தெற்கு காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் என்பதும், எல்லையில் உள்ள பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது.
ஜம்மு:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த தேடுதல் வேட்டையில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அதேசமயம், பயங்கரவாதிகளுக்கு உதவி செய்யும் நபர்களும் கண்டறியப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். 

அவ்வகையில், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பேர் ஜம்மு புறநகர்ப்பகுதியில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.43 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இவர்கள் மூன்று பேரும் தெற்கு காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் என்பதும், எல்லையில் உள்ள பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது. இவர்கள் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து தெற்கு காஷ்மீருக்கு பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக பணத்தை கொண்டு வந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
Tags:    

Similar News