தொழில்நுட்பம்
பேஸ்புக்

ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் களமிறங்கும் பேஸ்புக்

Published On 2021-02-15 04:11 GMT   |   Update On 2021-02-15 04:11 GMT
பேஸ்புக் நிறுவனம் புதிதாக ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


உலகின் முன்னணி சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக் ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பேஸ்புக்கின் புது ஸ்மார்ட்வாட்ச் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

புதிய ஸ்மார்ட்வாட்ச் செல்லுலார் இணைப்பு வசதி கொண்டிருக்கும். அந்த வகையில் இது ஸ்மார்ட்போன் இல்லாமலும் இயங்கும். இத்துடன் புதிய வாட்ச் பேஸ்புக் மெசன்ஜர் மற்றும் பல்வேறு முன்னணி பிட்னஸ் தளங்களுடன் இணைந்து செயல்படும் வசதி கொண்டிருக்கலாம்.



பேஸ்புக்கின் அணியக்கூடிய சாதனம் கூகுளின் ஆண்ட்ராய்டு ஒஎஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. தற்போதைய பேஸ்புக் ஹார்டுவேர் சாதனங்களை போன்றே இதுவும் கூகுள் தளத்தை கொண்டிருக்கும். எனினும், பேஸ்புக் நிறுவனம் தனது அணியக்கூடிய சாதனங்களுக்கென சொந்தமாக ஒஎஸ் ஒன்றை உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

புதிய அணியக்கூடிய சாதனத்தின் விலையை 200 டாலர்கள் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. புதிய சாதனம் ஆப்பிள் வாட்ச் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.
Tags:    

Similar News