செய்திகள்
பாஜக

2019-20 ஆண்டில் பாரதிய ஜனதா கட்சிக்கு ரூ.276 கோடி நன்கொடை குவிந்தது

Published On 2021-06-09 08:52 GMT   |   Update On 2021-06-09 08:52 GMT
2019-20ம் ஆண்டு பல்வேறு மாநில கட்சிகளுக்கும் தேர்தல் நிதி அதிக அளவில் கிடைத்துள்ளன. 35 அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளில் டி.ஆர்.எஸ். கட்சிக்கு அதிக அளவில் 130.46 கோடி கிடைத்துள்ளது.
புதுடெல்லி:

அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு அமைப்புகள் மூலம் நன்கொடை பெறப்படுகிறது.

2019-20ம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சிக்கு ரூ.276 கோடி நன்கொடை குவிந்துள்ளது. இதில் ஜன்கல்யாண் தேர்தல்  அறக்கட்டளை மூலம் ரூ.45.95 கோடியும், ஏ.பி. பொதுத்தேர்தல் அறக்கட்டளை மூலம் ரூ.9 கோடியும், சமாஜ் தேர்தல் அறக்கட்டளை மூலம் ரூ.3.75 கோடியும் தேர்தல் நிதியாக கிடைத்துள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு இதே ஆண்டில் ரூ.58 கோடி நன்கொடை கிடைத்திருக்கிறது. இதில் ரூ.31 கோடி தேர்தல் அறக்கட்டளை மூலமும், ரூ.25 கோடி ஜன் சமாஜ் தேர்தல் அறக்கட்டளையில் இருந்தும் ரூ.2 கோடி சமாஜ் தேர்தல் அறக்கட்டளை  மூலமும் கிடைத்திருக்கிறது.



2019-20ம் ஆண்டு பல்வேறு மாநில கட்சிகளுக்கும் தேர்தல் நிதி அதிக அளவில் கிடைத்துள்ளன. 35 அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளில் டி.ஆர்.எஸ். கட்சிக்கு அதிக அளவில் 130.46 கோடி கிடைத்துள்ளது.

சிவசேனா கட்சிக்கு ரூ.114.4 கோடி நிதி வந்துள்ளது. ஒய்.எஸ்.ஆர்.சி.பி. கட்சிக்கு ரூ.92.7 கோடியும், பி.ஜே.டி. கட்சிக்கு  ரூ.90.35 கோடியும் நிதி சேர்ந்துள்ளது.

அ.தி.மு.க.வுக்கு ரூ.89.6 கோடி தேர்தல் நிதி கிடைத்துள்ளது. தி.மு.க.வுக்கு ரூ.64.90 கோடி நிதி கிடைத்திருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி ரூ.49.65 கோடி நிதி பெற்றுள்ளது.
Tags:    

Similar News