செய்திகள்
அமித் ஷா

தமிழக சுற்றுப்பயணம் நிறைவு- டெல்லி புறப்பட்டார் அமித் ஷா

Published On 2020-11-22 05:19 GMT   |   Update On 2020-11-22 05:19 GMT
தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோருடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.
சென்னை: 

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா 2 நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று சென்னை வந்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட அமித் ஷா, மெட்ரோ ரெயில் 2ம் கட்ட பணிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். விழா முடிந்ததும் தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்றார்.

அங்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அமித் ஷாவை சந்தித்து பேசினர். அப்போது, தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் வியூகம் உள்பட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

இதையடுத்து, தமிழக பாஜக நிர்வாகிகளை அமித் ஷா சந்தித்து பேசினார். பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் அளவிலான கூட்டமும் நடைபெற்றது. 

இந்நிலையில், தமிழக சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை ஓட்டலில் இருந்து விமான நிலையத்திற்கு சென்றார். அங்கிருந்து 10.45 மணியளவில் தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.  அவரை கட்சி நிர்வாகிகள் வழியனுப்பி வைத்தனர். 
Tags:    

Similar News