செய்திகள்
கோத்தபய ராஜபக்சே

என் மீதும், எனது ஆட்சி மீதும் மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது - இலங்கை அதிபர் வேதனை

Published On 2021-10-11 06:48 GMT   |   Update On 2021-10-11 06:48 GMT
புதிய அரசியல் அமைப்பு, புதிய தேர்தல் முறை அடுத்த வருடத்துக்குள் உருவாக்கப்படும் என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

கொழும்பு:

இலங்கையின் 72-வது ராணுவ தினவிழா அனுராதபுரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிபர் கோத்தபய ராஜபக்சே கலந்து கொண்டார்.

கொரோனா நோயை கட்டுப்படுத்த கடந்த 2 ஆண்டுகளாக நாம் போராடி வருகிறோம். இதனால் நாட்டை முடக்குதல், பல்வேறு தடைகள் போன்றவை ஏற்படுத்தப்பட்டன. இதன் காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.


இந்த பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டதற்காக நான் நியாயம் கூறப்போவது இல்லை. ஆனாலும் இதை முறியடித்து வேலை வாய்ப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்களை முன்னெடுத்து செல்கிறோம்.

மக்கள் எதிர்பார்த்தது நிறைவேறவில்லை என்பதால் என் மீதும், இந்த ஆட்சி மீதும் மக்கள் வெறுப்பு அடைந்து இருப்பதை நான் உணர்கிறேன். அந்த வெறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனாலும் நாட்டை புதிய உத்வேகத்துடன் அபிவிருத்தி பாதைக்கு கொண்டு செல்வோம். புதிய அரசியல் அமைப்பு, புதிய தேர்தல் முறை அடுத்த வருடத்துக்குள் உருவாக்கப்படும். ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற உறுதிமொழியும் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு கோத்தபய ராஜபக்சே கூறினார்.

இதையும் படியுங்கள்...சுற்றுச்சூழல் ஆஸ்கார் இறுதி போட்டியில் தமிழக மாணவி பங்கேற்பு

Tags:    

Similar News