ஆட்டோமொபைல்
டாடா நெக்சான் இவி

உற்பத்தியில் புதிய மைல்கல் கடந்த டாடா நெக்சான் இவி

Published On 2020-08-19 08:36 GMT   |   Update On 2020-08-19 08:36 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் இவி மாடல் உற்பத்தியில் புதிய மைல்கல் கடந்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் இவி மாடல் உற்பத்தியில் ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் அமோக வரவேற்பு பெற்றுள்ள நெக்சான் இவி வெளியான ஆறே மாதங்களில் இந்த மைல்கல்லை எட்டி உள்ளது.

இந்திய சந்தையில் டாடா நெக்சான் இவி மாடல் விலை ரூ. 14 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 16 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்தியாவில் நெக்சான் இவி மாடல் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.



அறிமுகமானது முதல் அமோக வரவேற்பை பெற்று வரும் நெக்சான் இவி தற்போதைய எலெக்ட்ரிக் கார் சந்தை நிலவரப்படி சுமார் 62 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. 

அறிமுகமான போது இந்தியாவில் கிடைக்கும் விலை குறைந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி என்ற பெருமையை டாடா நெக்சான் இவி பெற்றது. நெக்சான் இவி மாடலில் 95கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 30.2 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.

இது 129 பிஹெச்பி பவர், 245 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. டாடா நெக்சான் இவி காரினை ஒருமுறை சார்ஜ் செய்தால் 312 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க முடியும்.
Tags:    

Similar News