ஆட்டோமொபைல்
ரிவோல்ட் ஆர்.வி. 400

இந்தியாவில் அறிமுகமானது ‘ரிவோல்ட்’ நிறுவனத்தின் 2 புதிய பைக் மாடல்கள்

Published On 2019-08-31 08:42 GMT   |   Update On 2019-08-31 08:42 GMT
இந்தியாவில் ‘ரிவோல்ட்’ நிறுவனம் 2 மாடல்களில் பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராகுல் ஷர்மா தலைமையில் தொடங்கப்பட்டுள்ள ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் நிறுவனம், தனது முதல் எலக்ட்ரிக் பைக் மாடலை ஆர்வி 400 என்ற பெயரில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

அசத்தலான தோற்றத்தை கொண்டுள்ள ஆர்வி 400 மின்சார பைக் மாடலுக்கு என பிரத்தியேகமான கருப்பு மற்றும் சிவப்பு என இரு நிறங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த மாடலில் முழு எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட் வழங்கப்பட்டு, டேங்க் போன்ற வடிவமைப்பின் கீழ் பேட்டரி மற்றும் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளன. முழு சிங்கிள் சார்ஜில் 156 கிமீ பயணிக்கும் திறன் கொண்டதாக இது உள்ளது.



இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு, கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் சேர்க்கப்பட்டுள்ளது. சிறப்பான பிரேக்கிங் சிஸ்டம் பெற்று முன்புறத்தில் யூஎஸ்டி ஃபோர்க் சஸ்பென்ஷன் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் கொண்டதாக வந்துள்ள இந்த மாடல் சிறப்பான ஸ்போர்ட்டிவ் நேக்டு ஸ்டீரிட் பைக் தோற்ற அமைப்பினை கொண்டுள்ளது.



இதோடு ஆர்.வி., 300 எனும் மற்றொரு மாடலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரிவோல்ட் நிறுவனம் சுலப தவணை திட்டத்தையும் ஆர்வி 300 உடன் சேர்த்து அறிவித்துள்ளது. ஆர்.வி., 300 பைக்குக்கு, 2,999 ரூபாயும், ஆர்.வி., 400 பைக்குக்கு, 3,499 ரூபாயும் மாதத் தவணையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்வி 300 பைக்கின் விலை ரூ.1,15,963. ஆர்வி 400 பைக்கின் பேஸ் விலை ரூ.1,34,463. பைக்கின் பிரீமியம் விலை ரூ.1,47,963.

பேட்டரியை பொறுத்தவரை, எட்டு ஆண்டுகள் (1.5 லட்சம் கி.மீ) ‘வாரண்டி’ தருகின்றனர். ஆர்.வி., 400 பைக், ஆர்.வி., 300 பைக்கை விட கூடுதல் செயல்திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News