லைஃப்ஸ்டைல்
பெற்றோர் - குழந்தைகளிடையே பேச்சுவார்த்தை அவசியம்

பெற்றோர் - குழந்தைகளிடையே பேச்சுவார்த்தை அவசியம்

Published On 2020-01-31 05:26 GMT   |   Update On 2020-01-31 05:26 GMT
உங்கள் குழந்தை உங்களுடன் பேச விரும்பி வரும்போது, மற்றவற்றில் இருந்து கவனத்தை எடுத்துவிட்டு உங்கள் குழந்தையின் மீது அவர் என்ன சொல்கிறார் என்பதன் மீதும் கவனத்தை செலுத்தவும்.
பெற்றோர் மற்றும் குழந்தைகளிடையே நல்ல பேச்சு வார்த்தை தொடர்பு (கம்யுனிகேஷன்) இருப்பது மிகவும் அவசியம். உங்களுக்கு உங்கள் குழந்தையுடன் பேசுவதில் ஆர்வம் இருப்பதை உணர்த்தவும். உங்கள் குழந்தை உங்களுடன் பேச விரும்பி வரும்போது, மற்றவற்றில் இருந்து கவனத்தை எடுத்துவிட்டு உங்கள் குழந்தையின் மீது அவர் என்ன சொல்கிறார் என்பதன் மீதும் கவனத்தை செலுத்தவும்.

தொலைக்காட்சி, லேப்டாப், மொபைல் ஃபோன் போன்றவற்றை தூரம் வைக்கவும். நீங்கள் பேசும் போது, அந்த பேச்சுவார்த்தையில் வேறு எவரேனும் இருக்கவேண்டும் என்பது அவசியமானால், அவரை சேர்த்துக் கொள்ளவும். அல்லது உங்களின் பேச்சு வார்த்தை தனிமையிலேயே இருக்கலாம்.

இது உங்கள் குழந்தையின் நம்பிக்கையை பெற உதவும். அவர் சொல்ல நினைக்கும் விஷயத்தை முழுவதுமாக முதலில் கேட்கவும். இதில் பொறுமையை கையாள்வது என்பது மிகவும் அவசியம். முழு விஷயத்தை கேட்கும் முன்பு, பேச்சுவார்த்தையை விட்டு விலகுதல், அல்லது அவரை திட்டுதல், அடித்தல் போன்றவற்றை நிச்சயம் செய்யக் கூடாது.

உங்கலின் அறிவுரை கேட்க நினைத்தால், ஓரிரு நாட்கள் நன்றாக யோசித்து உங்கள் குழந்தைக்கு அறிவுரை சொல்லவும். ஆழ்ந்து சிந்திக்காமல் சொல்லும் அறிவுரை சரியாக இருப்பதில்லை. அதேபோல, அவர் தவறு செய்துவிட்டார் என்று நினைத்தால் அவருக்கு அதை புரிய வைப்பது உங்கள் கடமை. ‘நீ என் பிள்ளை, தவறு செய்திருக்கமாட்டாய்’ என்று கூறினால், அவர் சொல்லப்போகும் விஷயம் முழுவதாக உங்களை வந்தடையாது.

அதற்கு பதிலாக ‘தவறு செய்வது இயல்புதா. பரவாயில்லை. திருத்திக்கொள்ளலாம்’ என்று சொல்லுங்கள். அதோடு நீங்கள் உங்கள் குழந்தைக்கு என்றும் பக்க பலமாக இருப்பேன் என்றும் உணர்த்துங்கள்.
Tags:    

Similar News