செய்திகள்
தற்கொலை

சுரண்டையில் திருமணம் தள்ளிப்போனதால் பெண் என்ஜினீயர் தற்கொலை

Published On 2020-09-14 08:10 GMT   |   Update On 2020-09-14 08:10 GMT
சுரண்டையில் திருமணம் தள்ளிப்போனதால் மனமுடைந்த பெண் என்ஜினீயர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை:

சுரண்டையை சேர்ந்தவர் செல்வம் (வயது 45), விவசாயி. இவருக்கு சினேகா (25) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். இதில் சினேகா என்ஜினீயரிங் முடித்துவிட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சினேகா சொந்த ஊருக்கு வந்தார். இந்நிலையில் நேற்றிரவு சினேகா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த சுரண்டை போலீசார் அவரது உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அவரது தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

சினேகா வேலைபார்த்த அதே நிறுவனத்தில் சுரண்டை அருகே உள்ள கழுநீர் குளம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரும் வேலை பார்த்தார்.

அப்போது சினேகாவுக்கும், அந்த வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இருவரும் தங்களது பெற்றோரிடம் காதல் பற்றி தெரிவித்தனர்.

இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்தாலும், இதுவரை திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்யாமல் இருந்து வந்துள்ளனர்.

இதற்கிடையே அந்த வாலிபருக்கு அவரது வீட்டில் ஒரு சிலர் சம்மதம் தெரிவிக்காததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அந்த வாலிபர் சினேகாவிடம் நமது பெற்றோர் சந்தோ‌ஷமாக வாழ வேண்டும். எனவே நாம் பிரிந்து விடலாம் என்று கூறியதாகவும் அதனால் சினேகா மனவேதனையில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் வாழ்வில் வெறுப்படைந்த சினேகா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Tags:    

Similar News