செய்திகள்
ஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டம்

ஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டம் - 7 பேர் பலி

Published On 2019-10-14 06:50 GMT   |   Update On 2019-10-14 06:50 GMT
ஈக்வடார் நாட்டில் அரசின் பொருளாராத சீர்திருத்தங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் இதுவரை 7 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குவைட்டோ:

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று ஈக்வடார். இந்த நாடு, பெரு, பிரேசில் நாடுகள் அருகே அமைந்துள்ளது. ஈக்வடாரில் பொருளாதார சீர்திருத்தங்கள் கொண்டுவர அரசு முடிவு செய்தது. சர்வதேச நாணய நிதியத்துடன் ஈக்வடார் அரசு செய்து கொண்ட ஒப்பந்ததின் ஒரு பகுதியாக  பல தசாப்தங்களாக மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த எரிபொருள் மானியங்களை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனால் ஆண்டுக்கு 2.27 பில்லியன் டாலர்கள் அரசுக்கு லாபம் கிடைக்கும். மேலும் அந்த நிதி நிறுவனத்திடமிருந்து ஈக்வடார் அரசு 4.2 பில்லியன் டாலர்கள் கடனும் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த பொருளாதார சீர்திருத்தங்கள் அடித்தட்டு மக்களை வெகுவாக பாதிப்பதாக கூறி, ஈக்வடார் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 10 நாட்களாக நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. போராட்டத்தில் ஈடுபட்ட 1152 மக்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் 1340 மக்கள் காயமடைந்துள்ளனர். மேலும் 7 பேர் பலியாகியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மக்களின் இயல்பு வாழ்க்கையை அச்சுறுத்தும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தோர் மீது பயங்கரவாத வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் அரசுத் தரப்பு வக்கீல் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News