செய்திகள்
பிடிபட்ட ஹெராயின்

பஞ்சாப்: ரூ.25 கோடி ஹெராயினுடன் ஆப்பிரிக்கப் பெண் கைது

Published On 2019-11-30 13:53 GMT   |   Update On 2019-11-30 13:53 GMT
பஞ்சாப் மாநிலத்தில் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயினுடன் கேமரூன் நாட்டுப் பெண்ணை போலீசார் இன்று கைது செய்தனர்.
சண்டிகர்:

பஞ்சாப் மாநிலம், கர்புதலா மாவட்டத்தை சேர்ந்த பாக்வாரா நகரப் போலீசார் சப்ரோர் என்ற கிராமத்தின் அருகே இன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்துக்கிடமான வகையில் அவ்வழியாக வந்த ஒரு ஆப்பிரிக்கப் பெண்ணை தடுத்து நிறுத்தினர்.

அவரது கைப்பையை சோதனையிட்டபோது உள்ளே சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பிலான 5 கிலோ ஹெராயின் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து அந்தப் பெண்ணை கைது செய்தனர்.

மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள கேமரூன் நாட்டை சேர்ந்த பெண்ணான அவர் வர்த்தக விசாவில் இந்தியாவுக்கு வந்து டெல்லி சந்தன் விஹார் பகுதியில் தங்கியிருந்துள்ளார்.

டெல்லியில் உள்ள ஹெராயின் கடத்தல் கும்பலை சேர்ந்த மைக் என்பவரிடம் இருந்து பாக்வாரா பகுதியில் விற்பதற்காக அவர் ஹெராயினை கொண்டுவந்ததாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Tags:    

Similar News