சமையல்
கோலி இட்லி

10 நிமிடத்தில் செய்யலாம் சத்தான கோலி இட்லி

Published On 2022-04-08 05:42 GMT   |   Update On 2022-04-08 05:42 GMT
காலையில் இட்லி சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு கோலி இட்லி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இதை செய்வது மிகவும் சுபலம். சத்தானதும் கூட.
தேவையான பொருட்கள்

அரிசி மாவு - 1 கப்
தண்ணீர் - 1 கப்
நெய் - 1 தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி

தாளிக்க

கடுகு - அரை தேக்கரண்டி
வெள்ளை எள் - 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
ப.மிளகாய் - 1
காய்ந்த மிளகாய் 2
இஞ்சி - சிறிய துண்டு
எண்ணெய் - 1 தேக்கரண்டி

செய்முறை

ப.மிளகாய், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் 1 கப் தண்ணீர் ஊற்றி அதில் உப்பு, நெய் சேர்த்து கொதிக்க விடவும்.

தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் அரிசி மாவை போட்டு கைவிடாமல் நன்றாக கலக்கவும். தண்ணீர் எல்லாம் வற்றியவுடன் அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு 5 நிமிடம் வேக விடவும்.

பின்னர் மாவை நன்றாக பிசைந்து சிறிய உருண்டைகளாக ( கோலி குண்டு வடிவில்) பிடித்து வைக்கவும்.

பிடித்து வைத்த உருண்டைகளை இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்ந்த மிளகாய், கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, எள், பெருங்காயம், இஞ்சி, ப.மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் அதில் வேக வைத்த உருண்டைகளை போட்டு நன்றாக கிளறி விடவும்.

பின்னர் 5 நிமிடம் அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு வேக விடவும்.

கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

சூப்பரான கோலி இட்லி ரெடி.
Tags:    

Similar News