தொழில்நுட்பம்
பி.எஸ்.என்.எல்.

இரு சலுகைகளில் அதிக பலன்களை வழங்கும் பி.எஸ்.என்.எல்.

Published On 2021-08-28 05:21 GMT   |   Update On 2021-08-28 05:21 GMT
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் பைபர் இணைய சேவை மற்ற நிறுவனங்களை விட குறைந்த விலையில் அதிக பலன்களை வழங்குகிறது.


ஏர்டெல், பி.எஸ்.என்.எல். மற்றும் ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் பைபர் தொழில்நுட்பத்தில் இணைய சேவையை வழங்கி வருகின்றன. சமீப காலங்களில் பைபர் சார்ந்த இணைய சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

பைபர் இணைய சேவையை பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ. 799 மற்றும் ரூ. 999 விலையில் மாதாந்திர சலுகைகளாக வழங்கி வருகிறது. இவற்றில் முறையே 100 Mbps மற்றும் 200 Mbps வேகத்தில் டேட்டா வழங்குகின்றன. 



இரு சலுகைகளிலும் 3300 ஜி.பி. டேட்டா, ஓ.டி.டி. தளங்களுக்கான சந்தா, லேண்ட்லைன் இணைப்பு உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகின்றன. இதேபோன்ற சலுகைகளை ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்களும் வழங்கி வருகின்றன. 

எனினும், ஏர்டெல் மற்றும் ஜியோ சலுகை கட்டணங்கள் பி.எஸ்.என்.எல். வசூலிப்பதை விட அதிகம் ஆகும். மேலும் இந்த தொழில்நுட்பத்தில் இணைய சேவையை வழங்குவதில் பி.எஸ்.என்.எல். அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. 
Tags:    

Similar News