தொழில்நுட்பம்
ஆண்ட்ராய்டு 12

ஆண்ட்ராய்டு 12 ஸ்டேபில் அப்டேட் வெளியீடு

Published On 2021-10-05 10:51 GMT   |   Update On 2021-10-05 10:54 GMT
கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு 12 பிரீ-இன்ஸ்டால் செய்து வழங்குகிறது.


கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு 12 குறித்த அறிவிப்பை 2021 ஐ.ஒ. நிகழ்வில் வெளியிட்டது. பல்வேறு டெவலப்பர் பிரீவியூ, பீட்டா பில்டுகளை கடந்து தற்போது ஆண்ட்ராய்டு 12 ஸ்டேபில் பதிப்பை வெளியிட்டு இருக்கிறது. எனினும், இது ஆண்ட்ராய்டு ஓபன் சோர்ஸ் பிராஜக்ட் முறையில் வெளியாகி இருக்கிறது.

தற்போதைய அப்டேட் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு வெளியிடப்படவில்லை. வரும் வாரங்களில் ஆண்ட்ராய்டு 12 ஸ்டேபில் அப்டேட் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு வெளியிடப்படும் என கூகுள் அறிவித்து இருக்கிறது. எனினும், சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.



ஆண்ட்ராய்டு 12 ஸ்டேபில் அப்டேட் பிக்சல் 3, பிக்சல் 3ஏ, பிக்சல் 4, பிக்சல் 4ஏ, பிக்சல் 4ஏ 5ஜி, பிக்சல் 5 மற்றும் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்படுகிறது. இதுதவிர விரைவில் அறிமுகமாக இருக்கும் பிக்சல் 6 சீரிஸ் மாடல்களில் ஆண்ட்ராய்டு 12 பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும்.

பிக்சல் ஸ்மார்ட்போன்கள் தவிர இந்த ஆண்டு இறுதியில் சாம்சங், ஒன்பிளஸ், ஒப்போ, சியோமி, ரியல்மி, டெக்னோ மற்றும் விவோ நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் ஆண்ட்ராய்டு 12 ஸ்டேபில் அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.
Tags:    

Similar News