செய்திகள்
டீம் இந்தியா

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு?- ஐசிசி அறிவிப்பு

Published On 2021-06-14 14:39 GMT   |   Update On 2021-06-14 14:39 GMT
சவுத்தாம்ப்டனில் 18-ந்தேதி தொடங்கும் இறுதி ஆட்டத்தில் சாம்பியன் பட்டத்திற்காக இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற புதிய தொடரை ஐசிசி நடைமுறைப்படுத்தியது. 2019 முதல் 2021 வரை நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டியில் பலப்பரீட்சை நடத்த வேண்டும்.

இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லும். அடுத்த இரண்டு வருடத்திற்கு வெற்றி பெறும் அணிதான் தலைசிறந்த டெஸ்ட் கிரிக்கெட் அணியாக கருதப்படும்.


புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்த இந்தியாவும், 2-வது இடம் பிடித்த நியூசிலாந்தும் வருகிற 18-ந்தேதி தொடங்கும் போட்டியில் சாம்பியன் பட்டத்திற்காக பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தியா 17 டெஸ்டில் 12 போட்டிகளில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து 7 போட்டிகளில் வெற்றி பெற்றது. இந்தியாவின் வெற்றி சதவீதம் 72.2. நியூசிலாந்தின் வெற்றி சதவீதம் 70.



இந்த போட்டிக்கான பரிசுத்தொகையை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய பண மதிப்பில் 11 கோடியே 71 லட்சத்து 66 ஆயிரத்து 960 ரூபாய்) வழங்கப்படும். 


தோல்வியடையும் அணிக்கு 8 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய பண மதிப்பில் ரூ. 5,85,83,480) வழங்கப்படும். போட்டி டிராவில் முடிந்தால் மொத்த பரிசுத்தொகை பகிர்ந்து அளிக்கப்படும்.

இத்தகவலை ஐசிசி சிஇஓ ஜெஃப் அலார்டைஸ் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News