செய்திகள்
கோப்புப்படம்

கொரோனாவுக்கு எதிரான அமெரிக்க தடுப்பூசிகளால் இதயக்கோளாறா?

Published On 2021-06-24 21:03 GMT   |   Update On 2021-06-24 21:03 GMT
பைசர் அல்லது மாடர்னா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் சிலருக்கு இதயம் விரிவடைவதற்கான அறிகுறிகள் (பெரிகார்டிடிஸ்) தென்படுவதாக தெரிய வந்துள்ளது
வாஷிங்டன்:

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக அமெரிக்காவில் பைசர், மாடர்னா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்த தருணத்தில் பைசர் அல்லது மாடர்னா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் சிலருக்கு இதயம் விரிவடைவதற்கான அறிகுறிகள் (பெரிகார்டிடிஸ்) தென்படுவதாக தெரிய வந்துள்ளது . எனவே இந்த தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்கள் கவனமாக இருக்குமாறு அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் எச்சரித்துள்ளது.

குறிப்பாக இந்த தடுப்பூசி செலுத்திய நிலையில் மார்பு வலி, மூச்சுத்திணறல், வேகமான துடிப்பு, படபடப்பு உள்ளிட்டவற்றை உணர்ந்தால் உடனடியாக டாக்டர்களை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேற்கூறிய இரு தடுப்பூசிகளிலும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இதுபோன்ற எச்சரிக்கைகளைச் சேர்க்கும் என்று எதிர்பார்ப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
Tags:    

Similar News