செய்திகள்
பாகுபலி யானை

மேட்டுப்பாளையம் பகுதியில் வனத்துறையினரிடம் சிக்காமல் போக்கு காட்டும் பாகுபலி யானை

Published On 2021-07-16 11:26 GMT   |   Update On 2021-07-16 11:26 GMT
கும்கி யானைகள் தங்க வைக்கப்பட்டுள்ள அரசு மரக்கிடங்கு வளாகத்தையொட்டிய கோத்தகிரி ரோட்டை கடந்து வனப்பகுதி வழியாக மேட்டுப்பாளையம் பாலப்பட்டி ரோட்டில் உள்ள ஊமப்பாளையம் முனியப்பன் கோவில் ரோட்டில் மெல்ல மெல்ல ஆடி அசைந்துபடி பாகுபலி யானை உலா வந்தது.

மேட்டுப்பாளையம்:

மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதிகளில் பாகுபலி என்ற ஒற்றை காட்டு யானை சுற்றி திரிந்து வருகிறது. இந்த யானை இரவு நேரங்களில் வெளியேறி வனப்பகுதியை யொட்டிய விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்து வந்தது.

இதையடுத்து யானையை கண்காணிக்கவும், அதன் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் ரேடியோ காலர் பொருத்தவும் வனத்துறை முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு பாகுபலி யானையை தேடும் பணி நடந்தது. ஆனால் யானை வனத்துறையினரின் கண்ணில் சிக்காமல் போக்கு காட்டியது.

இதன் காரணமாக ரேடியோ காலர் பொருத்தும் பணி கடந்த மாதம் 28-ந் தேதி முதல் 10 நாட்களுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இருந்த போதிலும் யானையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு கும்கி யானைகள் தங்க வைக்கப்பட்டுள்ள அரசு மரக்கிடங்கு வளாகத்தையொட்டிய கோத்தகிரி ரோட்டை கடந்து வனப்பகுதி வழியாக மேட்டுப்பாளையம் பாலப்பட்டி ரோட்டில் உள்ள ஊமப்பாளையம் முனியப்பன் கோவில் ரோட்டில் மெல்ல மெல்ல ஆடி அசைந்துபடி பாகுபலி யானை உலா வந்தது.

சிறிது நேரம் அங்கு சுற்றிதிரிந்த பாகுபலி காட்டு யனை திடீரென ரோட்டோரத்தில் இருந்த தோட்டத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலியை தனது முன்னங்காலால் மிதித்து தோட்டத்திற்குள் செல்ல முயற்சி செய்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்து யானையை சத்தம் போட்டு விரட்ட முயற்சித்தனர். உடனடியாக இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாகுபலி யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். 

Tags:    

Similar News