உள்ளூர் செய்திகள்
கடற்கரை திருவிழாவையொட்டி புதுவை கடற்கரையில் நாட்டுப்புற நடனம் நடந்தது.

மூங்கில் இசைக்கருவி இசையுடன் நாட்டுப்புற நடனம்

Published On 2022-04-16 08:44 GMT   |   Update On 2022-04-16 08:44 GMT
மூங்கில் இசைக்கருவி இசையுடன் நாட்டுப்புற நடனத்தை சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.
புதுச்சேரி:

புதுவையில் முதன் முதலாக கடற்கரை திருவிழா நடைபெற்று வருகிறது.

பாண்டி மெரீனா கடற்கரை, புதுக்குப்பம் மணற்குன்று, வீராம்பட்டினம் ரூபி கடற்கரை, சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரை ஆகிய பகுதிகளில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்-பட்டுள்ளது. 

கடற்கரை சாலை லேகபே, குபேர் அவென்யூவில் மூங்கில் இசைக்கருவி இசை, நாட்டுப்புற இசை, நடனம், பரதநாட்டியம், புல்லாங்-குழல், வயலின், மிருதங்கம், மற்றும் தப்பாட்டம் நடந்தது. 

நடன நிகழ்ச்சி மற்றும் இசை நிகழ்ச்சியில் சினிமா பாடல்கள், பக்தி பாடல்கள், மற்றும் கர்நாடக இசையுடன் பாடல்கள் பாடப்பட்டது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கண்டு-களித்தனர். 

கடற்கரைகளில் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.
Tags:    

Similar News