ஆன்மிகம்
கன்னியாகுமரியில் தர்ப்பணம் செய்யும் பக்தர்கள்(பழைய படம்)3

மகாளய அமாவாசை: கன்னியாகுமரி கடலில் நாளை புனித நீராட பொதுமக்களுக்கு தடை

Published On 2020-09-16 07:17 GMT   |   Update On 2020-09-16 07:17 GMT
நாளை (17-ந்தேதி) வியாழக்கிழமை முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலில் பொதுமக்கள் நீராடி தர்ப்பணம் கொடுக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கன்னியாகுமரி :

ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை ஆகிய அமாவாசை தினங்களில் பொதுமக்கள் நீர்நிலைகளில் நீராடி மூதாதையர்களுக்கு திதி கொடுத்து வழிபடுவது வழக்கம்.

இவ்வாறு வழிபட்டால் மூதாதையர்களின் ஆன்மா சாந்தி அடைந்து அவர்களின் ஆசி குடும்பத்தினருக்கு கிடைக்கும் என்பது இந்து மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

இந்நிலையில் நாளை புரட்டாசி மகாளய அமாவாசை தினமாகும். ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் 10-ந்தேதிக்கு பிறகுதான் மகாளய அமாவாசை வரும். இந்த ஆண்டு நாளை புரட்டாசி மாதம் 1-ந்தேதி பிறக்கும் நிலையில் அன்றைய தினமே மகாளய அமாவாசை வருவது சிறப்பு தினமாக கருதப்படுகிறது.

ஆனால் கொரோனா காரணமாக தற்போது நீர்நிலைகளில் நீராட அரசு பொதுமக்களுக்கு தடை விதித்துள்ளது. இதனால் நாளை (17-ந்தேதி) வியாழக்கிழமை முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலில் பொதுமக்கள் நீராடி தர்ப்பணம் கொடுக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

நாளை கடலுக்கு மக்கள் வருவதை தடுக்க போலீசார் மூலம் தீவிர கண்காணிப்பும் போடப்பட்டுள்ளது. வழக்கமாக புரட்டாசி மகாளய அமாவாசைக்கு கன்னியாகுமரி கடலில் ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பிரச் சினை காரணமாக அது தடைபட்டுள்ளது.
Tags:    

Similar News