பெண்கள் மருத்துவம்
நிரந்தர கருத்தடை முறைகள்

நிரந்தர கருத்தடை முறைகள்

Published On 2022-04-30 08:17 GMT   |   Update On 2022-04-30 08:17 GMT
தம்பதியினர் இனி குழந்தையே வேண்டாம் என்பதில் உறுதியாய் இருக்கின்றபோதே கருத்தடை செய்து கொள்ளவேண்டும். ஆண், பெண் இருவருக்கும் செய்யும் நிரந்தர கருத்தடை முறைகளை அறிந்து கொள்ளலாம்.
நிரந்தரமாக செய்து கொள்ளும் கருத்தடை முறையில் கரு அணு அல்லது கரு முட்டையை எடுத்து செல்லும் குழாயை தடுப்பது அல்லது வெட்டி எடுப்பது போன்ற முறைகள் கையாளப்படுகிறது. இம்முறையில், தம்பதியினர் இனி குழந்தையே வேண்டாம் என்பதில் உறுதியாய் இருக்கின்றபோதே செய்து கொள்ளவேண்டும்.

ஆண்களுக்கான நிரந்தர கருத்தடை முறை

வாசக்டமி என்பது ஆண்கள் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை மூலம் செய்யப்படும் சிறிய மாறுதல். இந்த அறுவை சிகிச்சையை செய்வதன் மூலம் கரு அணு செல்வது தடைபடுவதால், பெண்கள் கருத்தரிப்பதை தவிர்க்கலாம். ஆனால் அறுவை சிகிச்கை முடிந்து 48 மணி நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். ஒரு வாரம் வரையில் அதிக பளுவுள்ள பொருட்களை துாக்கக் கூடாது. அறுவை சிகிச்சைக்கு பின் வீக்கம், வலி, ரத்தப்போக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

பெண்களுக்கான நிரந்தர கருத்தடை

இந்த முறையில், பெண்களின் பிறப்புறுப்பில் செய்யும் சிறிய அறுவை சிகிச்சையால், ஒவரியில் வளரும் கருமுட்டை கரு அணுவுடன் இணைவது தடுப்கப்படுகிறது. சரியான முறையில் செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சை முறை சிறந்த கருத்தடை முறையாகும். ஒரு சில நேரங்களில் இன்பெக்ஷன், ரத்தக்கசிவு ஏற்படலாம். அதிக வலி மற்றும் உதிரம் போக்கு இருக்கும்போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அறுவை சிகிச்கை முடிந்து 48 மணி நேரம் ஓய்வும், 2-3 நாட்களுக்கு அதிகபளுவோ துாக்கக் கூடாது.
Tags:    

Similar News