செய்திகள்
திமுக

அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது தி.மு.க. 2-வது ஊழல் பட்டியல்

Published On 2021-02-19 10:12 GMT   |   Update On 2021-02-19 10:12 GMT
தமிழக அமைச்சர்கள் மீது 2-வது ஊழல் பட்டியலை தி.மு.க. தயாரித்துள்ளது. இந்த பட்டியலை இன்று மாலை கவர்னரிடம் தி.மு.க.வினர் வழங்குகிறார்கள்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மீது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே ஊழல் பட்டியலை தயாரித்து கவர்னரிடம் வழங்கி இருந்தார்.

இந்தநிலையில் தமிழக அமைச்சர்கள் மீது 2-வது ஊழல் பட்டியலை தி.மு.க. தயாரித்துள்ளது.

இந்த பட்டியலை தி.மு.க. பொதுச்செயலாளர் துரை முருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. உள்ளிட்டோர் சென்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் இன்று மாலை வழங்குகிறார்கள்.
Tags:    

Similar News