செய்திகள்

மாநில பட்டியலில் கல்வியை சேர்ப்பதே நிரந்தர தீர்வாகும் - கனிமொழி

Published On 2018-05-07 10:49 GMT   |   Update On 2018-05-07 10:49 GMT
இனியும் நீட் தேர்வால் தமிழகத்தில் வேறு ஒரு மரணம் நிகழாமல் இருக்க மாநில பட்டியலில் கல்வியை சேர்ப்பதே நிரந்தர தீர்வாகும் என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். #NEET2018 #KrishnasamyDeath

திருத்துறைப்பூண்டி:

கேராளவுக்கு நீட் தேர்வுக்கு மகனை அழைத்து சென்ற திருத்துறைப்பூண்டி விளக்குடியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் மாரடைப்பால் நேற்று உயிரிழந்தார். அவரது உடல் இன்று அதிகாலை சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.

இதைத் தொடர்ந்து அவரது உடலுக்கு கனிமொழி எம்.பி. அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நீட் தேர்வுக்கு அழைத்து சென்ற தந்தை இன்று இறந்து விட்டார். தந்தையை இழந்து நிற்கும் அவரது மகனுக்கும், மகளுக்கும் அரசு என்ன பதில் சொல்ல போகிறது. கல்வி மாநில பட்டியலில் இல்லாதது தான் இது போன்ற சம்பவங்களுக்கு காரணமாக உள்ளது.

அதனால் கல்வியை உடனே மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும். இது தான் நிரந்தர தீர்வாக இருக்கும். தமிழ்நாட்டை மத்திய அரசிடம் அடகு வைத்துவிட்டனர். நீட்தேர்வுக்கு கடந்த ஆண்டு அனிதா என்ற மாணவி பலியானார். இந்த ஆண்டு கிருஷ்ணசாமி பலியாகி உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News