செய்திகள்
உயர் நீதிமன்ற மதுரை கிளை

போலீசாரின் இந்த செயல்கள் மனநல பிரச்சினைகளின் வெளிப்பாடு -நீதிமன்றம்

Published On 2020-11-23 10:11 GMT   |   Update On 2020-11-23 10:11 GMT
குடும்பத்தினருடன் நேரம் செலவிடவோ, போதுமான அளவு தூங்கவோ போலீசாருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளை கூறி உள்ளது.
மதுரை:

மதுரை அல்லது திருச்சி சிறையில் மனநல சிகிச்சை அமைப்பை ஏற்படுத்தக்கோரி ராஜா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, கருத்து தெரிவித்த நீதிமன்றம், இந்தியாவைப் பொருத்தவரை சாதாரண மருத்துவர்களைவிட மனநல மருத்துவர்களே அதிகம் தேவை என்று கூறியது.

‘போலீஸ் வன்முறை மற்றும் லஞ்சம் பெறுவது மனநல பிரச்சினைகளின் வெளிப்பாடுதான். குடும்பம் ஒரு வகையில் அழுத்தங்களை உள்வாங்கிக்கொள்ளும் வடிகாலாக அமைகிறது. குடும்பத்தினருடன் நேரம் செலவிடவோ, போதுமான அளவு தூங்கவோ போலீசாருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை’ என்று நீதிமன்றம் தெரிவித்தது.

தென் தமிழக சிறைகளில் மனநல சிகிச்சை மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நவம்பர் 25ம் தேதிக்கு (நாளை மறுநாள்) ஒத்திவைக்கப்பட்டது.
Tags:    

Similar News