செய்திகள்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

புல்வாமா தாக்குதல் பாக். அரசின் பெரிய சாதனை எனக்கூறிய மந்திரிக்கு இம்ரான்கான் சம்மன்

Published On 2020-11-04 00:08 GMT   |   Update On 2020-11-04 00:08 GMT
புல்வாமா தாக்குதல் பாகிஸ்தான் அரசின்பெரிய சாதனை என தெரிவித்த அந்நாட்டு அறிவியல், தொழில்நுட்பத் துறை மந்திரிக்கு இம்ரான்கான் சம்மன் அனுப்பியுள்ளார்.
இஸ்லமாபாத்:

ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40 சி.ஆா்.பி.எஃப். படையினா் உயிரிழந்தனா். 

அத்தாக்குதலைக் குறிப்பிட்டு பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பேசிய அந்நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மந்திரி பவாத் சௌத்ரி, புல்வாமா தாக்குதலில் கிடைத்த வெற்றி, பிரதமா் இம்ரான்கான் தலைமையில் நாட்டுக்கே கிடைத்த வெற்றி என தெரிவித்திருந்தாா்.

உலக அரங்கில் பாகிஸ்தானுக்கு பெரும் தர்மசங்கடத்தை இந்த விவகாரம் ஏற்படுத்தியது. 

இந்நிலையில், நேரில் வந்து விளக்கம் அளிக்கும்படி மந்திரி பவாத் சௌத்ரிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சம்மன் விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தானுக்கும் புல்வாமா தாக்குதலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என இம்ரான்கான் கூறிவருவது நினைவுகூரத்தக்கது.
Tags:    

Similar News