தொழில்நுட்பம்
ஒன்பிளஸ் நார்டு 2

வெடித்து சிதறிய நார்டு 2 - உடனடி பதில் அளித்த ஒன்பிளஸ்

Published On 2021-08-04 04:28 GMT   |   Update On 2021-08-04 04:28 GMT
சமீபத்தில் வெடித்து சிதறிய நார்டு 2 ஸ்மார்ட்போனில் என்ன பிரச்சினை ஏற்பட்டது என ஒன்பிளஸ் தெரிவித்து இருக்கிறது.


ஒன்பிளஸ் பயனர் ஒருவர் தனது மனைவியின் நார்டு 2 ஸ்மார்ட்போன் வெடித்து சிதறியதாக தனது ட்விட்டரில் பதிவிட்டார். தனது பதிவில் வெடித்து சிதறியதால் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே, பக்கவாட்டு மற்றும் பின்புறங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் தெளிவாக தெரியும் படி புகைப்படங்களையும் அவர் இணைத்து இருந்தார். பயனர் குற்றச்சாட்டுக்கு ஒன்பிளஸ் பதில் அளித்துள்ளது.



"வெடித்து சிதறிய நார்டு 2 ஸ்மார்ட்போனினை முழுமையாக ஆய்வு செய்தோம். அந்த மாடலில் எந்த விதமான உற்பத்தி கோளாறும் ஏற்படவில்லை. நார்டு 2 வெளிப்புற காரணிகளால் தான் வெடித்து சிதறியது என எங்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது."

"குற்றம்சாட்டிய பயனருடன் தொடர்ந்து இணைப்பில் இருக்கிறோம். வாடிக்கையாளரின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு மட்டுமே எங்களின் ஒரே நோக்கம் ஆகும். பயனரின் குறைகளை தீர்ப்பது மற்றும் நன்னிலையை உறுதிப்படுத்தும் நோக்கில் சிறந்த சேவையை வழங்கி இருக்கிறோம்," என தெரிவித்து இருக்கிறது.
Tags:    

Similar News