செய்திகள்
அமெரிக்காவில் பரபரப்பு வானிலை அறிக்கையின்போது ஆபாச படம் ஒளிபரப்பிய டி.வி.

அமெரிக்காவில் பரபரப்பு: வானிலை அறிக்கையின் போது ஆபாச படம் ஒளிபரப்பிய டி.வி.

Published On 2021-10-22 02:46 GMT   |   Update On 2021-10-22 03:43 GMT
திடீரென ஆபாச படம் வந்ததால், பார்த்துக் கொண்டிருந்த யாராலும் அதை நிறுத்த முடியவில்லை. செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்த அத்தனை பேரும் முகம் சுளிக்க நேரிட்டது.
வாஷிங்டன் :

அமெரிக்காவில் வாஷிங்டன் நகரத்தில் ஒரு டி.வி. சேனல் ஒளிபரப்பில் சற்றும் எதிர்பாராத விபரீதம் நடந்துள்ளது.

கடந்த 17-ந் தேதியன்று உள்ளூர் நேரப்படி மாலை 6.30 மணிக்கு அந்த டி.வி. சேனலில் வானிலை அறிக்கை ஒளிபரப்பப்பட்டது. அப்போது இடையே திடீரென 13 வினாடிகள் ஆபாச படம் ஒளிபரப்பானது.

திடீரென ஆபாச படம் வந்ததால், பார்த்துக் கொண்டிருந்த யாராலும் அதை நிறுத்த முடியவில்லை. செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்த அத்தனை பேரும் முகம் சுளிக்க நேரிட்டது.

இது குறித்து போலீசுக்கு புகார்கள் குவிந்தன.

ஆனால் வானிலை அறிக்கையை அப்போது அந்த டி.வி.யில் வாசித்துக்கொண்டிருந்த செய்தி வாசிப்பாளர் மிச்செல்லி பாஸ், இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறி உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், “இந்த விவகாரம் குறித்து புகார்கள் வந்துள்ளன. விசாரணையை முடுக்கி விட்டுள்ளோம்” என கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த டி.வி. சேனல் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
Tags:    

Similar News