தொழில்நுட்பம்

வைபை சான்று பெற்ற நோக்கியா புதிய ஸ்மார்ட்போன்

Published On 2019-02-23 07:43 GMT   |   Update On 2019-02-23 07:43 GMT
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் வைபை சான்று பெற்றிருக்கிறது. #Nokia #Smartphone



சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனின் புதிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. நோக்கியா நிறுவனம் TA-1157 என்ற மாடல் நம்பர் கொண்ட புதிய ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் சமீப காலமாக ஈடுபட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் மாடல் நம்பர் உள்ளிட்டவற்றை வைத்து பார்க்கும் போது நோக்கியா 3.1 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் நோக்கியா 3.2 என்று அழைக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் கூகுளின் ஆண்ட்ராய்டு ஒன் திட்டத்தின் கீழ் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் அமெரிக்காவின் எஃப்.சி.சி. வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இருந்தது. அதன்படி நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் எல்.இ.டி. ஃபிளாஷ் யூனிட் ஒன்றும் வழங்கப்படுகிறது.


புகைப்படம் நன்றி: SlashLeaks

தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் வைபை அலையன்ஸ் சான்று பெற்றிருக்கிறது. இதில் ஸ்மார்ட்போனின் மேலும் சில விவரங்கள் கிடைத்திருக்கிறது. அதன்படி நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனில் வைபை 802.11 b/g/n மற்றும் வைபை டைரக்ட் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகிறது.

மற்ற அம்சங்களை பொருத்தவரை நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனில் 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரியும், 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி என இருவித வேரியண்ட்களில் அறிமுகமாகிறது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படலாம் என தெரிகிறது. 

நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனுடன் ஹெச்.எம்.டி. குளோபல் நோக்கியா 9 பியூர் வியூ, நோக்கியா 4.2 மற்றும் நோக்கியா 1 பிளஸ் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களையும் அறிமுகம் செய்யலாம்.
Tags:    

Similar News