தொழில்நுட்பம்
சியோமி

அன்டர் டிஸ்ப்ளே கேமராவுடன் உருவாகும் சியோமி ஸ்மார்ட்போன்

Published On 2020-05-23 06:15 GMT   |   Update On 2020-05-23 06:15 GMT
சியோமி நிறுவனத்தின் Mi மிக்ஸ்4 ஸ்மார்ட்போன் அன்டர் டிஸ்ப்ளே கேமராவுடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



சியோமி நிறுவனத்தின் Mi மிக்ஸ்4 ஸ்மார்ட்போன் செல்ஃபி கேமரா டிஸ்ப்ளேவின் கீழ் மறைக்கப்பட்டு இருக்கும் என நீண்ட காலமாக தகவல்கள் வெளியாகி வந்தது. தற்சமயம் வெளியாகி இருக்கும் லைவ் படங்களில் Mi மிக்ஸ்4 ஸ்மார்ட்போன் அன்டர் டிஸ்ப்ளே கேமரா கொண்டிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

சீனாவை சேர்ந்த சமூக வலைதளமான வெய்போவில் புதிய Mi மிக்ஸ்4 ஸ்மார்ட்போனின் லைவ் படங்கள் வெளியாகி இருக்கிறது. இதில் புதிய ஸ்மார்ட்போனில் அன்டர் டிஸ்ப்ளே கேமரா வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. ஸ்மார்ட்போனின் ஸ்கிரீனில் கேமரா காணப்படாததால், முன்புற கேமரா பெரும்பாலும் டிஸ்ப்ளேவின் கீழ் இருக்கும் என தெரிகிறது.



புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான காப்புரிமைகளை சியோமி ஏற்கனவே பெற்று இருந்தது. மேலும் புதிய தொழில்நுட்பம் ஏற்கனவே சோதனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இணையத்தில் வெளியாகி இருக்கும் ரென்டர்களில் இருக்கும் ஸ்மார்ட்போன் புதிய Mi மிக்ஸ் தான் என எடுத்து கொள்ள முடியாது என்றும் கூறப்படுகிறது. 

முன்னதாக வெளியான தகவல்களின் படி மேலும் புதிய ஸ்மார்ட்போனின் அன்டர் டிஸ்ப்ளே கேமராவை இயக்கியதும், சென்சாரின் மேல் இருக்கும் ஸ்கிரீன் கண்ணாடி போன்று மாறும் என கூறப்பட்டது. இதனால் அதை கடந்து வெளிச்சம் உள்ளே போக முடியும். இதனால் புகைப்படங்களை எடுப்பது சாத்தியமாகும்.

கேமரா அம்சத்தினை  ஆஃப் செய்ததும் டிஸ்ப்ளே அடியில் உள்ள கேமரா மறைந்து கொண்டு ஸ்கிரீன் வழக்கமானதாக மாறி நிறங்களை பிரதிபலிக்க துவங்கி விடும். இந்த தொழில்நுட்பத்துடன் வெளியாகும் ஸ்மார்ட்போன் விலை நிச்சயம் அதிகமாக இருக்கும்.
Tags:    

Similar News