செய்திகள்
கோப்புபடம்

அரசு வீடு கட்டும் திட்டத்தில் சிக்கல்

Published On 2021-06-20 07:39 GMT   |   Update On 2021-06-20 07:39 GMT
ஊரடங்கால் மணல், செங்கல், கம்பி உட்பட கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்தும், தட்டுப்பாடும் ஏற்பட்டது.
பல்லடம்:

நடுத்தர மற்றும் எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பிரதமர் வீடு கட்டும் திட்டம் 2015-ல் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கும் மானியத்துடன் பயனாளிகள் வீடுகள் கட்டி வருகின்றனர்.

ஊரடங்கால் கட்டுமானத் துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்குக்கு முன் வீடு கட்ட துவங்கிய பலர் மணல், கம்பி, செங்கல் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். தொழிலாளர்களும் வர முடியாததால் கட்டுமான பணிகள் பாதியில் நிற்கின்றன. இதனால் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கால அவகாசம் முடிந்ததால் மானியம் கிடைக்காது என தேசிய வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் பயனாளிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து பல்லடம் வட்டார பயனாளிகள் சிலர் கூறுகையில், ஊரடங்கால், மணல், செங்கல், கம்பி உட்பட கட்டுமான பொருள் விலை உயர்ந்தும், தட்டுப்பாடும் ஏற்பட்டது. தேவையான பொருட்கள் கிடைக்காமலும், தொழிலாளர்கள் இன்றியும் வீட்டை கட்டிமுடிப்பதில் தாமதம் ஆகிறது.

இந்த இக்கட்டான சூழலில் தேசிய வீட்டு வசதி வாரியம் நெருக்கடி கொடுத்து வருவது கவலை அளிக்கிறது. எனவே மத்திய அரசு நடவடிக்கை எடுத்து மானியம் பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News