செய்திகள்
மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சியில் அதிகமான கல்லூரிகள் திறப்பு -முதலமைச்சர் ஸ்டாலின்

Published On 2021-10-15 15:38 GMT   |   Update On 2021-10-15 15:38 GMT
கல்லூரிகள் மூலமே திமுக வளர்ந்ததால், திமுக ஆட்சி அமைந்தால் அதிக கல்லூரி திறக்கிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சென்னை:

லயோலா கல்வி நிறுவனத்தின் மேலாண்மை கல்வி நிறுவன புதிய கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் அதிகமான கல்லூரிகள் உருவாக்கப்பட்டு வருவதாக கூறினார். மேலும், அவர் பேசியதாவது:-

அனைவருக்கும் அடிப்படைக் கல்வி என்ற இலக்கை எளிதாக அடைந்துவிட்டோம். தொழில் முனைவோர்களை உருவாக்கும் மேலாண்மை நிறுவனங்கள் பெருக வேண்டும்.

கல்லூரிகள் மூலமே திமுக வளர்ந்தது. எனவே தான் திமுக ஆட்சி அமைந்தால் அதிக கல்லூரி திறக்கிறோம். காமராசர் காலத்தில் பள்ளிகள் அதிகமாகவும், திமுக ஆட்சியில் கல்லூரிகள் அதிகமாகவும் திறக்கப்பட்டது. கல்லூரிகள் வேலையாட்களை மட்டுமல்லாமல் சமூக சிந்தனை கொண்ட தலைவர்களையும் உருவாக்க வேண்டும்.

இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழகம் மாற வேண்டும். முதல்வர்களில் முதலாவது இடத்தில் இருப்பதை விட மாநில வரிசையில் தமிழகம் முதலாவதாக இருக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கனிமொழி, மாணவ - மாணவியர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News