செய்திகள்
கனிமொழி

தமிழ்நாட்டை யாரும் பிரிக்க முடியாது- கனிமொழி

Published On 2021-07-11 07:55 GMT   |   Update On 2021-07-11 07:55 GMT
தமிழ் மண்ணின் பெருமைகளை எந்த கால கட்டத்திலும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி விட்டுக் கொடுக்காது என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டி: 

சுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கட்டாலங்குளம் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு மண் மற்றும் மண்ணின் பெருமைகளை பாதுகாப்பதற்காக தன் இன்னுயிரைத் தந்த சுதந்திர போராட்ட வீரர்களின் பெருமைகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தொடர்ந்து காப்பாற்றப்படும்.

 
தமிழ் மண்ணின் பெருமைகளை எந்த கால கட்டத்திலும் 
மு.க.ஸ்டாலின்
    தலைமையிலான ஆட்சி விட்டுக் கொடுக்காது. நம்முடைய பெருமை மற்றும் உரிமைகளுக்காக தி.மு.க. ஆட்சி தொடர்ந்து போராடும். 

தமிழ்நாட்டை யாரும் பிரிக்க முடியாது. அந்தக் கனவு எல்லாம் நிறைவேறாது. எனவே கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அரசியல் சட்டத்தில் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று தான் குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே ஒன்றிய அரசு என்று கூறுவது தவறு இல்லை. 

இது நாட்டுக்கு எதிரான ஒன்றுமில்லை. தமிழ்நாடு இன்று பாதுகாப்பான ஆட்சியின் கீழ் இருக்கிறது. எனவே அதை பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. 

அப்போது அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதா கிருஷ்ணன்,  கலெக்டர் செந்தில்ராஜ்,  எம்.எல்.ஏ.க்கள். மார்க்கண்டேயன், ஊர்வசி அமிர்தராஜ், ஊராட்சி மன்ற தலைவர் தம்பா ஆகியோர் உடனிருந்தனர். 

Tags:    

Similar News