உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பொங்கல் பண்டிகைக்கு கைதிகள் பரோலில் செல்ல தடை

Published On 2022-01-13 10:02 GMT   |   Update On 2022-01-13 10:02 GMT
வேலூர் ஜெயிலில் இருந்து பொங்கல் பண்டிகைக்கு கைதிகள் பரோலில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வேலூர்:

வேலூர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஜெயிலில் உள்ள கைதிகள் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின்போது பரோலில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக முன்கூட்டியே கைதிகளிடம் விண்ணப்பம் பெறப்படும். கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் அவர்களுக்கு பண்டிகை கால பரோல் வழங்கப்படும்.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி பரோலில் செல்வதற்காக ஏராளமான கைதிகள் ஆர்வமுடன் இருந்தனர். ஆனால் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கைதிகளை பரோலில் செல்ல சிறைத்துறை நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை.

இதனால் வேலூர் ஜெயிலில் கைதிகளிடம் பரோல் விண்ணப்பங்கள் எதுவும் பெறப்படவில்லை.
மேலும் வழக்கமாக ஜெயிலில் நடைபெறும் பொங்கல் விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாளை பொங்கல் பண்டிகையையொட்டி வேலூர் ஜெயிலில் உள்ள கைதிகளுக்கு காலையில் வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், வடை, கரும்பு ஆகியவை வழங்கப்படுகிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News