லைஃப்ஸ்டைல்
முத்திரை

கொரோனாவை தடுக்கும் முத்திரைகள்

Published On 2020-04-09 04:30 GMT   |   Update On 2020-04-09 04:30 GMT
கொரோனா வைரஸ் தாக்காமல் வாழ கீழ்கண்ட முத்திரைகளை தினமும் காலை,மாலை இரண்டு நிமிடங்கள் பயிற்சி செய்யவும்.
எண்ணற்ற முத்திரைகள் இருந்தாலும் ராஜ உறுப்புக்களுக்கு சக்தி கொடுக்கும் முக்கியமான முத்திரைகளை மட்டும் முறையாக காலை,மாலை இரண்டு வேளை ஒவ்வொரு முத்திரையையும் இரண்டு நிமிடங்கள் பயிற்சி செய்தால் போதும், நிச்சயமாக கொரோனா வைரஸ்ஸிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். கொரோனா வைரஸ் தாக்காமல் வாழ கீழ்கண்ட முத்திரைகளை தினமும் காலை,மாலை இரண்டு நிமிடங்கள் பயிற்சி செய்யவும்.

சூன்ய முத்திரை செய்முறை

நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். மூச்சோட்டத்தை ஒரு நிமிடம் கூர்ந்து கவனிக்கவும். பின் நடுவிரலை மடக்கி அதன் நுனி உள்ளங்கையில் தொடட்டும் அதன் மையத்தில் பெருவிரலை வைத்து சிறிய அழுத்தம் கொடுக்கவும். இரு கையிலும் இவ்வாறு செய்யவும். (படத்தைப் பார்க்க). இரண்டு நிமிடங்கள் இருக்கவும். இதயம்,சிறுகுடல், இதயமேலுறை மிக நல்ல பிராண ஆற்றல் பெற்று இயங்கும். நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும்.

பிரிதிவிமுத்திரை - செய்முறை

நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். மூச்சோட்டத்தை ஒரு நிமிடம் கூர்ந்து தியானிக்கவும். பின் கண்ணை திறந்து மோதிரவிரல் பெருவிரல் நுனியை தொட்டு ஒரு சிறிய அழுத்தம் கொடுக்கவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் இருக்கவும். மண்ணீரல், இரப்பை நல்ல சக்தி பெற்று இயங்கும். நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும்.

வாயு முத்திரை

நிமிர்ந்து உட்காரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி ஒரு நிமிடம் இயல் பாக நடக்கும் மூச்சோட்டத்தை கூர்ந்து தியானிக் கவும். கண்களை திறந்து ஆள்காட்டி விரலை மடக்கி அதன் மையத்தை கட்டை விரலை வைத்து ஒரு சிறிய அழுத்தம் கொடுக்கவும். இரண்டு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் இருக்கவும். நுரையீரல் இயக்கம் நன்றாக இருக்கும். நல்ல நோய் எதிர்பாற்றல் கிடைக்கும்.

சுத்தப்படுத்தும் முத்திரை

நிமிர்ந்து உட்காரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி ஒரு நிமிடம் இயல் பாக நடக்கும் மூச்சோட்டத்தை கூர்ந்து கவனிக் கவும். எல்லா விரல்களையும் சேர்த்து வைக்கவும். பெருவிரலினால் மோதிரவிரலின் முதல் பகுதியில் சிறிய அழுத்தம் கொடுக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் இருக்கவும். சிறுகுடல், பெருங்குடல் நன்கு சக்தி பெற்று இயங்கும். நோய் எதிர்பாற்றல் கிடைக்கும். கழிவுகள் குடலில் தங்காது. அதனால் உடலில் ஜீரண மண்டலம் நன்றாக இயங்கும்.

பிராண முத்திரை செய்முறை


நிமிர்ந்து உட்காரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி ஒரு நிமிடம் மூச்சோட்டத்தை கூர்ந்து கவனிக்கவும். கண்களை திறக்கவும் - மோதிர விரல் சுண்டுவிரல் மடக்கி அதன் மையத்தில் பெரு விரல் நுனியை தொட்டு ஒரு சிறிய அழுத்தம் கொடுக்கவும். இரண்டு நிமிடங்கள் இருக்கவும். சிறுநீரகம், சிறுநீரகப்பை மிக நன்றாக இயங்கும். நோய் எதிர்பாற்றல் கிடைக்கும்.

ஆகாய முத்திரை

நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி ஒரு நிமிடம் மூச்சோட்டத்தை கூர்ந்து கவனிக்கவும். கண்களை திறக்கவும் நடு விரல் நுனியையும் கட்டை விரல் நுனி யையும் தொடவும். இரு கைகளிலும் செய்ய வேண்டும். இரண்டு நிமிடங்கள் இருக் கவும். கல்லீரல், பித்தப்பை நன்கு சக்தி பெற்று இயங்கும். நோய் எதிர்பாற்றல் கிடைக்கும்.

மேற்குறிப்பிட்ட ஆறுமுத்திரைகளை தினமும் காலை, மாலை பயிற்சி செய்யுங்கள். நமது உடலில் இதயம், சிறுகுடல், மண்ணீரல், இரைப்பை, நுரையீரல், பெருங்குடல், சிறுநீரகம், சிறுநீரகப்பை, கல்லீரல், பித்தப்பை மிகச் சக்தி பெற்று இயங்கும். அதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். எந்த ஒரு வைரஸ்சும் தாக்காது.

கொரோனா வைரஸ்சிற்காக இந்த முத்திரைகளைச் செய்தால், அதிலும் தாக்காமல் வெற்றி பெறலாம். மேலும் வேறு நோய் இல்லாமல் வளமாக வாழலாம். ராஜ உறுப்பான இதயம், நுரையீரலை பாதுகாக்கும், நோய் எதிர்ப்பு திறன் தரும் புஜங்காசனம் செய்முறை

குப்புறப்படுத்து கொள்ளவும். இரு கைகளையும் மார்பு பக்கத்தில் ஒட்டி வைத்து கொள்ளவும். மூச்சை மெதுவாக இழுத்து கொண்டு தலையை மேலே தூக்கவும். இடுப்பு பகுதி வரை தரையில் இருக்க வேண்டும். 15 வினாடிகள் மூச்சடக்கி இருக்கவும். பின் மூச்சை மெதுவாக வெளியில் விட்டு தரையில் நெற்றியை வைக்கவும். மூன்று
முறைகள் செய்யவும்

Tags:    

Similar News