தொழில்நுட்பம்
கூகுள்

2021 ஐ/ஒ தேதியை அறிவித்த கூகுள்

Published On 2021-04-08 10:00 GMT   |   Update On 2021-04-08 10:00 GMT
கூகுள் நிறுவனம் இந்த ஆண்டுக்கான டெவலப்பர் நிகழ்வு தேதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.


கூகுள் நிறுவனம் தனது கூகுள் I/O வருடாந்திர டெவலப்பர் நிகழ்வு மே 18 துவங்கி மே 20 வரை நடைபெறும் என அறிவித்து இருக்கிறது. இந்த ஆண்டு டெவலப்பர் நிகழ்வு விர்ச்சுவல் முறையில் நடைபெறுகிறது. இதில் அனைவரும் இலவசமாக கலந்து கொள்ளலாம்.

வழக்கமாக கூகுள் தனது டெவலப்பர்கள் நிகழ்வில் புதிய ஆண்ட்ராய்டு வெர்ஷனை வெளியிடும். மூன்று நாட்கள் நடைபெறும் நிகழ்வில் கூகுள் வழங்கும் மென்பொருள் சேவைகள் பற்றி டெவலப்பர்களுடன் விவாதங்கள், உரையாடல்கள் நடைபெறும். 



இவற்றுடன் இந்த ஆண்டு கூகுள் நிறுவனம் ஹார்டுவேர் சாதனங்களான மேம்பட்ட பிக்சல் பட்ஸ் மற்றும் பிக்சல் 5ஏ உள்ளிட்டவைகளை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு கூகுள் I/O நிகழ்வு கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது. மேலும் ஆன்லைன் மூலமாகவும் இந்த நிகழ்வு நடத்தப்படவில்லை.

கொரோனாவைரஸ் பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வராத காரணத்தால் கூகுள் 2021 I/O நிகழ்வினை விர்ச்சுவல் முறையில் நடத்துகிறது. இதற்கென பிரத்யேக வலைதளம் ஒன்றையும் கூகுள் திறந்துள்ளது. இதில் கலந்து கொள்பவர்களுக்கான முன்பதிவும் துவங்கி நடைபெறுகிறது.

Tags:    

Similar News