செய்திகள்
உதயநிதி ஸ்டாலின்

கட்சி அறிவிக்கும் அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்போம் - உதயநிதி ஸ்டாலின்

Published On 2019-12-13 13:02 GMT   |   Update On 2019-12-13 13:02 GMT
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு கைதான உதயநிதி ஸ்டாலின், கட்சி தலைமை அறிவிக்கும் அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்போம் என தெரிவித்துள்ளார்.
சென்னை:

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தி.மு.க. இளைஞரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
சென்னை சைதாப்பேட்டையில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு அளித்த எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராகவும் கண்டன முழக்கமிட்ட பின்னர் மேடையில் குடியுரிமை சட்டத்திருத்த நகலை கிழித்து எறிந்தனர்.

அதன்பிறகு மேடையை விட்டு இறங்கி உதயநிதி ஸ்டாலின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டார். அவரை போலீசார் கைது செய்தனர். 

இதற்கிடையே, திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு கைதான உதயநிதி ஸ்டாலின் மாலையில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், மாலையில் விடுவிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின், கட்சி தலைமை அறிவிக்கும் அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்போம் என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த அ.தி.மு.க.விற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். கட்சி தலைமை அறிவிக்கும் அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்போம் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News