செய்திகள்
தடுப்பூசி வருகை

தமிழகத்திற்கு இன்று ஒரே நாளில் 8 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வருகை

Published On 2021-06-12 13:55 GMT   |   Update On 2021-06-12 13:55 GMT
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் போதிய அளவு தடுப்பூசி இல்லாததால் தடுப்பூசி போடும் பணி பாதிக்கப்பட்டது.
சென்னை:

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு ஒதுக்கீடு மற்றும் மாநில அரசு கொள்முதல் மூலம் தடுப்பூசிகள் வருகின்றன. ஆனால் போதிய சப்ளை இல்லாததால் சில பகுதிகளில் தடுப்பூசி போடுவதில் தாமதம் ஏற்பட்டது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் போதிய அளவு தடுப்பூசி இல்லாததால் தடுப்பூசி போடும் பணி பாதிக்கப்பட்டது. தடுப்பூசி போடுவதற்காக வந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

இந்நிலையில் நேற்று 3.65 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி டோஸ்கள் மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் இருந்து சென்னைக்கு வந்தடைந்தன. அதன்பின்னர், இன்று ஒரே நாளில் 8 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வந்தன. காலையில் 1 லட்சத்து 25 ஆயிரம் டோஸ்கள் கோவாக்சின் தடுப்பூசிகள், மாலையில் 7 லட்சம் டோஸ்கள் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளன. 


இந்த தடுப்பூசிகள் மாவட்டம் வாரியமாக பிரித்து அனுப்பப்படுகின்றன. இதனால் நாளை முதல் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி வேகமெடுக்கும்.
Tags:    

Similar News