தொழில்நுட்பம்

ஸ்னாப்டிராகன் 730 பிராசஸருடன் இந்தியா வரும் சியோமி ஸ்மார்ட்போன்

Published On 2019-04-27 11:17 GMT   |   Update On 2019-04-27 11:17 GMT
சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர் கொண்டிருக்கும். #Xiaomi



சியோமி இந்தியா தலைவர் மனு குமார் ஜெயின் குவால்காம் இந்தியா தலைவர் ராஜன் வகேடியாவை தான் சந்தித்து பேசியதாக தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். இச்சந்திப்பில் சியோமியின் அடுத்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 7 சீரிஸ் பிராசஸர் வழங்குவது பற்றி விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அந்த வகையில் குவால்காம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர் புதிய சியோமி ஸ்மார்ட்போனில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் பற்றி சியோமி இதுவரை எவ்வித தகவலும் வழங்கவில்லை.



எனினும், கடந்த வாரம் வெளியான விவரங்களில் புதிய சியோமி ஸ்மார்ட்போன் பாப்-அப் கேமரா மற்றும் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இத்துடன் புதிய மாடலில் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர், 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. டெலிபோட்டோ கேமரா மற்றும் 13 எம்.பி. அல்ட்ரா-வைடு ஆங்கிள் லென்ஸ் வழங்கப்படலாம்.

புதிய சியோமி ஸ்மார்ட்போன் Mi 9எஸ்.இ. மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என்றும் சீனாவில் இது Mi 9X என அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் Mi ஏ3 ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனாக அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News