செய்திகள்
கோப்பு படம்

மகாராஷ்டிராவில் சட்டவிரோதமாக குடியேறிய வங்காளதேசத்தினர் 15 பேர் கைது

Published On 2020-11-01 11:24 GMT   |   Update On 2020-11-01 11:24 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக குடியேறிய வங்காளதேசத்தினர் 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை:

அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர்களை கண்டறியும் வகையில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) தயாரிக்கப்பட்டது. 

இதனால் வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் பலர் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று அங்குள்ள மக்களோடு மக்களாக மறைந்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களை கண்டுபிடிக்கும் வகையில் குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் நயா நகர் காவல் எல்லைக்கு உள்பட்ட மீரா சாலை ஸ்கைவாக் பகுதியில் வங்காளதேச நாட்டை சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக குடியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். 

அந்த சோதனையில் விசா மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி அப்பகுதியில் குடியிருந்த 15 வங்காளதேச நாட்டினரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வங்காளதேச நாட்டினரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.  
Tags:    

Similar News