ஆன்மிகம்
பொங்கலூர் நீலகண்டி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பொங்கலூர் நீலகண்டி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2021-02-06 03:34 GMT   |   Update On 2021-02-06 03:34 GMT
பொங்கலூரில் நீலகண்டி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் ஆனதையொட்டி ராஜகோபுரம் உட்பட அனைத்து கோபுரங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
பொங்கலூரில் நீலகண்டி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் ஆனதையொட்டி கோவில் புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேகம் விழா கடந்த 1-ந்தேதி காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து வாஸ்து சாந்தி, முதல் கால யாக பூஜை, 2-ம்கால மற்றும் 3-ம் கால யாக பூஜைகள் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 4.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை மற்றும் 4-ம்கால யாக பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து காலை 7.45 மணிக்கு புனிதநீர் கலசங்கள் மேளதாளத்துடன் சிவாச்சாரியார்களால் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு ராஜகோபுரம் உட்பட அனைத்து கோபுரங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

அதனைத்தொடர்ந்து 8:15 மணிக்குமேல் பரிவார தெய்வங்கள், சிவாலய தெய்வங்கள் மற்றும் நீலகண்டியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. விழாவிற்கு கூனம்பட்டி கல்யாணபுரிஆதீனம் சரவண மாணிக்கவாசக சுவாமிகள் தலைமை தாங்கினார்.

பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுரு அடிகளார், பழனி ஆதீனம் சாது சண்முக அடிகளார், செஞ்சேரிமலை முத்துசிவராம சுவாமி அடிகளார், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழா ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் மோகன் கார்த்திக் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர். விழாவில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News