லைஃப்ஸ்டைல்
சர்க்கரை நோய்- தவிர்க்க, சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகள்

சர்க்கரை நோய்- தவிர்க்க, சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகள்

Published On 2019-06-28 07:44 GMT   |   Update On 2019-06-28 07:44 GMT
சர்க்கரை நோய் வரும் முன் காப்பதற்கான ஆலோசனைகளையும், தவிர்க்க, சேர்த்து கொள்ள வேண்டிய உணவுகளை பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
அடிக்கடி தண்ணீர் குடிக்கவும், உணவிற்கு முன்னர் அருந்தும் ஒரு கோப்பை நீர் உணவின் அளவை குறைக்கும். தினமும் 2 முறை பல்துலக்குவது நல்லது. மருத்துவரின் அறிவுரைப்படி தினமும் உடற்பயிற்சிகளை 1/2 மணி நேரம் செய்ய வேண்டும். சாப்பிட்ட உணவின் கலோரிகளை பயன்படுத்தும் அளவுக்கு சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். 6 மாதத்திற்கு ஒரு முறை உடல்பரிசோதனை செய்து கொள்வது நல்லது. உடலில் ரத்த அழுத்தத்தையும் கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுகோப்பாக வைத்து கொள்ள வேண்டும்.

முக்கியமாக தவிர்க்க வேண்டிய உணவுப்பொருட்கள் : சர்க்கரை நோயாளிகள் முக்கியமாக தவிர்க்க வேண்டிய உணவு பொருட்கள்:- சர்க்கரை மற்றும் வெல்லம் சேர்த்து செய்யப் படும் இனிப்பு வகைகள், தேன், பொரித்த உணவுகள், உருளைகிழங்கு, பீட்ரூட், காரட், இனிப்பான குளிர்பானங்கள், இளநீர், தேங்காய், மைதா, அரிசிப்பொருட்கள் பழஜூஸ் வகைகள் குறிப்பாக ஆப்பிள், மாதுளை, திராட்சை, தர்பூசணி, சப்போட்டா, அத்தி.

கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டிய உணவு பொருட்கள்:- வெங்காயம், வெண்டைக்காய், பாகற்காய், முள்ளங்கி, கோவைக்காய், எலுமிச்சை, புதினா, ஆவியில் வைத்த உணவுகள்(இட்லி, இடியாப்பம், கொழுக்கட்டை), மோர், பாதாம்பருப்பு, சூப்வகைகள், மூங்கில் அரிசி, இந்துப்பு, கார் அரிசி, கேழ்வரகு, கோதுமை, பாசிபயிறு, சுண்டல் வகைகள், உளுந்து, கொய்யா, பப் பாளி, முட்டை வெண்கரு, கீரைகளில் குறிப்பாக பசலைக்கீரை அல்லது பாலக்கீரை, வெந்தயக்கீரை, முருங்கைகீரை, சிறுக்கீரை, அரைக்கீரை, மணத்தக்காளி, பொன்னாங்கன்னி கீரை.

இந்நோய் வராமல் தடுக்க பசி நன்கு வந்த பிறகு தான் சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பின் சிறிது குறுநடை கொள்ள வேண்டும். நொறுக்கு தீனி உணவுகளை தவிர்த்து கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

சர்க்கரைநோயின் அறிகுறிகள்

அதிக தாகம், அதிக பசி, அடிக்கடி சிறுநீர் கழிதல், உடல் எடை கூடுதல் அல்லது குறைதல், சிறுநீர் தொற்று, தோலில் அரிப்பு காணல், கண்பார்வை திறன் மங்குதல், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து காணல், சிறுநீரில் சர்க்கரை சத்து காணல், சிராய்ப்பு அல்லது வெட்டுகாயம் ஆகியவை ஆறுவதற்கு அதிக காலம் பிடித்தல் பாதங்களில் மற்றும் கைகால்களில் எரிச்சல், உடற்சோர்வு, கைகால், தோள்பட்டை எலும்புகளில் வலி.
Tags:    

Similar News