செய்திகள்
பவானிசாகர் அணை

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2021-09-18 04:28 GMT   |   Update On 2021-09-18 04:28 GMT
நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அதிகரித்து வருகிறது.
சத்தியமங்கலம்:

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக கோவை மாட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பவானி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அந்த தண்ணீர் நள்ளிரவு முதல் பவானிசாகர் அணைக்கு வரத்தொடங்கியது.

இன்று காலை 6 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக இருந்தது. அணைக்கு 4852 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலில் வினாடிக்கு 483 கனஅடியும், கீழ் பவானி வாய்க்காலில் 800 கனஅடியும், பவானி ஆற்றில் 3517 கனஅடியும் என மொத்தம் 4800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அதிகரித்து வருகிறது.

மேலும் அணையில் இருந்து கீழ் பவானி பாசனம் மற்றும் காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தாலும் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியில் நீடிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News