செய்திகள்
டிடிவி தினகரன்

அமமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம்- தினகரன் பங்கேற்பு

Published On 2021-02-23 03:43 GMT   |   Update On 2021-02-23 03:43 GMT
அமமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் கலந்து கொள்கிறார்.
சென்னை:

அ.ம.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் விழா 24-ந் தேதி (நாளை) கொண்டாடப்படுகிறது. அன்று காலை 11 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.ம.மு.க. தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்.

இதனைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு தாம்பரம் சண்முகம் சாலையில் நடைபெறவிருக்கும் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் கலந்துகொண்டு பேசுகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News