செய்திகள்
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

தனியார் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்- சார்ஜா கல்வி ஆணையம் அறிவிப்பு

Published On 2021-01-19 07:28 GMT   |   Update On 2021-01-19 07:28 GMT
14 நாட்களுக்கு ஒரு முறை தனியார் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என சார்ஜா கல்வி ஆணையம் அறிவித்துள்ளது.
சார்ஜா:

சார்ஜா தனியார் கல்வி ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சார்ஜா பகுதியில் மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தனியார் பள்ளிக்கூட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் 14 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசியை 2 முறை போட்டிருந்தால் அவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய கட்டாயமில்லை.

இந்த கல்வி நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் ஆணையத்தின் தலைமை அலுவலகத்துக்கு வரும்போது, 72 மணி நேரத்துக்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்ததற்கான சான்றிதழை கொண்டு வர வேண்டும்.

மேலும் தனியார் பள்ளிக்கூட நிர்வாகம் தங்களது நிறுவனத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டவர்கள் விவரம், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் விவரம் உள்ளிட்டவற்றை செயலியில் பதிவு செய்து வர வேண்டும்.

கல்வி ஆணையத்தின் அதிகாரிகள் கல்வி நிறுவனங்களுக்கு வரும் போது ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்ட சான்றிதழை காட்ட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News