ஆன்மிகம்
ஞானப்புகழ்ச்சி பாடுதல் நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.

தக்கலை ஞானமாமேதை பீர்முகமது ஒலியுல்லா ஆண்டு விழாவில் ஞானப்புகழ்ச்சி பாடுதல் நிகழ்ச்சி

Published On 2021-03-01 03:14 GMT   |   Update On 2021-03-01 03:14 GMT
தக்கலை ஞானமாமேதை பீர்முகமது ஒலியுல்லா ஆண்டு விழாவையொட்டி ஞானப்புகழ்ச்சி பாடுதல் நிகழ்ச்சி விடிய, விடிய நடந்தது.
தக்கலை ஞானமாமேதை பீர்முகமது ஒலியுல்லா 18 ஆயிரம் ஞானப்புகழ்ச்சி பாடல்களை எழுதியுள்ளார். இவரது ஆண்டு விழா தக்கலை அஞ்சுவன்னம் பீர்முகமதியா முஸ்லிம் அசோசியேஷன் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் மார்க்க பேரூரை நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பீர்முகமது ஒலியுல்லா எழுதிய ஞானப்புகழ்ச்சி பாடுதல் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு தொடங்கி, விடிய, விடிய நடந்தது. ஜமாத் மக்கள் ஒன்றிணைந்து ஞானப்புகழ்ச்சியில் உள்ள பாடல்களை இசை வடிவில் கூட்டாக பாடினர். இதில் தூத்துக்குடி, நெல்லை மற்றும் கேரளாவில் இருந்து திரளானவர்கள் வந்து கலந்து கொண்டனர். நேற்று மாலை நேர்ச்சை வழங்கப்பட்டது. மார்ச் 3-ந்தேதி சியாரத் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
Tags:    

Similar News